விஜய் - அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடிய படம் "பிகில்". தீபாவளி விருந்தாக கடந்த ஆண்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. பெண்கள் கால் பந்தாட்ட அணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில், ராயப்பன் மற்றும் மைக்கேல் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார் விஜய். இதில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார். 

இதையும் படிங்க: பாம்புக்கு முத்தம் கொடுத்த சிங்கத்துக்கு முதல்ல முள்ள எடுத்து விடுங்க... செப்டிக் ஆயிட போகுது... செப்டிக் ஆயிட போகுது... ரஜினியை மரண கலாய், கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகிபாபு, ஆனந்த் ராஜ், கதிர், இந்துஜா, அம்ரிதா ஐயர், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஜய்யுடன் படம் பண்ண ஆரம்பித்ததில் இருந்தே, அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் படு ஆக்டிவாக உள்ளார். படம் குறித்த சின்ன அப்டேட்களை கூட டுவிட்டரில் சொடுக்கிவிட்டு, தளபதி ஃபேன்ஸை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இது என்னடா தளபதிக்கு வந்த புது சோதனை... அடுத்தடுத்து லீக்காகும் "மாஸ்டர்" ஷூட்டிங் காட்சிகள்... கதறும் ரசிகர்கள்...!

இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படம் இந்த வாரத்தோடு 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் அதிக அளவில் வசூல் செய்த படமும், சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் அதிக சாதனைகளை செய்த படமும் "பிகில்" தான் என்று குறிப்பிட்டுள்ளார். 

அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட்டை பார்த்த விஜய் புள்ளிங்கோ, #Bigil100days என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.