லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்துவருகிறார்.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் - விஜய் சேதுபதி இடையிலான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய் - விஜய்சேதுபதி இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வது போன்ற மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி, உலக அளவில் ட்ரெண்டானது.

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

அந்த சந்தோஷத்தை படக்குழு முழுவதுமாக என்ஜாய் செய்வதற்குள், மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதையடுத்து தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் சண்டையிடுவது போன்ற காட்சி லீக்காகியுள்ளது. 

ஆனால், அது மாஸ்டர் படத்தின் காட்சியா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  ஏனென்றால், மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்பில் விஜய்யின் முகம் சரிவர தெரியவில்லை. இது மாஸ்டர் படத்தின் காட்சி என்று சிலர் ஷேர் செய்து வருகின்றனர்.

லீக்கான சண்டை காட்சி மாஸ்டர் படத்தின் காட்சியா?, இல்லையா? என்ற குழப்பத்திற்கு நடுவே, அந்த வீடியோவை யாரும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்ய வேண்டாம் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு முன்னதாக விஜய்யின் ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோஸ், விஜய் சேதுபதி சென்னை ஷூட்டிங்கில் நடந்த காட்சி என சோசியல் மீடியாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.