கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு சமீபத்தில் கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதில் மேலும் விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர் உள்ளிட்டோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகாவிற்கு சவால் விட்ட சமந்தா... மாமனார் சொன்ன காரியத்தை எப்படி முடிச்சிருக்காங்க பாருங்க

பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் பிரபல நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது. எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத், கலை தோட்டா தரணி, ஒளிப்பதிவு ரவி வர்மன், வசனம் ஜெயமோகன், இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் என டெக்னிக்கல் சைடும் செம்ம மாஸான டீம் களம் இறங்கியது. ஆனால் இந்த கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது. உலகம் முழுவதும் தீயாய் பரவிய கொரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்காக ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு அடித்து பிடித்து தாயகம் வந்து சேர்ந்தது. 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட் லைகா தயாரித்து வரும் இந்த படத்தில் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது கூட இதுவரை வெளிவராத தகவலாக உள்ளது. அதனால் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை வரும் செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அந்த படப்பிடிப்பில் விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

விக்ரம்  “ஆதித்த கரிகாலன்” என்ற கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராய் “மந்தாகினி” மற்றும் “நந்தினி” என்ற இரட்டை வேடத்திலும் நடிக்க உள்ளாராம். ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராய் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்து சிகிச்சையில் உள்ளதால் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் ஐஸ்வர்யா ராய்க்கு தீவிர தொற்று இல்லை என்பதால் விரைவில் குணமடைந்து ஷூட்டிங்கில் பங்கேற்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ராவணன் படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு, விக்ரம், ஐஸ்வர்யா ராய் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.