நடிகர் பிரபாஸ் நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் (Adipurush) திரைப்படத்தின் டீசர் அயோத்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

'பாகுபலி' படத்தின் ரிலீசுக்கு பின்னர், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களாலும் விரும்பப்படும் நாயகனாக இருக்கும் பிரபாஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ராதே ஷியாம்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பாத்துக்கு மத்தியில் வெளியான போதிலும், படு தோல்வியை சந்தித்தது. எனவே இனி நடிக்கும் படங்களில் பிரபாஸ் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் பிரபாஸின் 22வது படமாக தற்போது உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' (Adipurush) படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில், இராமாயண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும், ராவணனாக பாலிவுட் நடிகர் சையது அலி கானும், நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

மேலும் செய்திகள்: காதலில் சிக்கி விட்டாரா ஜான்வி? உன்னுடன் இல்லாதது சோகமான நாள்... அவுட்டோர் பதிவால் அப்செட்டான பிரபலம்!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின், டீசர் ரிலீசையே வேற லெவலுக்கு பிளான் செய்து வெளியிட தயாராகியுள்ளனர் ரசிகர்கள். அந்த வகையில், 'ஆதிபுருஷ்' படத்தின் டீசரை அயோத்தியில் வெளியிட படக்குழு தயாராகியுள்ளது. இது குறித்த அதிகார பூர்வ தகவலை... இந்த படத்தின் இயக்குனர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி... உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் 'ஆதிபுருஷ்' டீசர் வெளியாக உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்: Ponniyin Selvan sneak peek: வீரபாண்டியன் தலையறுத்து கொன்ற சோழ மன்னர்கள் உயிரெடுக்க துடிக்கும் பாண்டியர்கள்!

Scroll to load tweet…

மேலும் இந்த படத்தை, ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியிட படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த தகவலையும் இயக்குனர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.