இன்ஸ்டா வீடியோ செய்து அசத்தியுள்ள இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

பிரபல நடிகர் சரத்குமார் சாயாவின் மகளான வரலட்சுமி சரத்குமார். தற்போது தென்னிந்தியாவில் அறியப்பட்ட நடிகைகளில் ஒருவராக உள்ளார். பிரபல நடிகரின் மகளாக இருந்த போதிலும் முன்னணி நடிகைக்கான வாய்ப்பை இதுவரை பெறாத வரலட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமாகியுள்ளார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவுவிடாமல் குணச்சித்திர வேட ங்கள் முதல் வில்லி காதாபாத்திரம் வரை அனைத்தையும் ஏற்று அதில் தனது திறமையை பிரதிபலித்து வருகிறார்.

வரலட்சுமி முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். லண்டனை சேர்ந்த நடன கலைஞராக இவர் நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து மதகஜ ராஜா, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் உடன் கரகாட்டம் ஆடும் பெண்ணாக வந்து கவர்ச்சி புயலை வீசி இருந்தார் வரலட்சுமி. பின்னர் விக்ரம் வேதா மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் தோன்றிய இவர் சண்டை கோழி 2வில் விஷாலுக்கு வில்லியாகவும், சர்க்கார் படத்திலும் கோமள வல்லியாகவும் வந்து மிரட்டி இருந்தார். இதில் பிரபல அரசியல்வாதியின் மகளாக நடித்து பாராட்டுகளை குவித்திருந்தார் வரலட்சுமி.

மேலும் செய்திகளுக்கு...மறுபடியும் தப்பு செய்யும் ஆதி...பொறுக்கமுடியாமல் கன்னத்தில் அரை விட்ட ஜெசி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு..சமந்தாவிற்கு இனிமேல் பின்னணி குரல் கொடுக்க மாட்டேன்...அடம்பிடிக்கும் பிரபல பாடகி

இதை தொடர்ந்து வரலட்சுமிக்கு வில்லி கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகளே அதிகம் அமைந்தது. பின்னர் தனுஷின் மாரி 2 படத்தில் விசாரணை அதிகாரியாக நடித்த இவர் தற்போது சமந்தாவின் யசோதா, பாம்பன் பிறந்தால் பராசக்தி, வண்ணங்கள் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு சூப்பர் நாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணாவின் 107வது படத்திலும் நாயகியாகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் வரலட்சுமி.

 இதற்கிடையே பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு தனது உடலை உருமாற்றம் செய்துள்ள வரலட்சுமி அது குறித்தான வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார்.தற்போது இன்ஸ்டா வீடியோ செய்து அசத்தியுள்ள இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...5 மொழி குரல் கொடுத்த பிரபலங்களை அறிமுகம் செய்த...பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனம்...

View post on Instagram