ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தில் தமன்னா இணைந்துள்ள உள்ள தகவலை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', போன்ற வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் விஜய்யை வைத்து 'பீஸ்ட்' படத்தை இயக்கி முடித்த பின்னர், தற்போது ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

கிழிந்த பாவாடையில்.. முழு கால்களை காட்டி மூட் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்! அட்ராசிட்டி போட்டோஸ்..!

இப்படம் குறித்து அவ்வபோது சில தகவல்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஜனவரி 17ஆம் தேதி இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை தொடர்ந்து நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானாலும், இதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில்... தற்போது தமன்னா இப்படத்தில் இணைத்துள்ளதை சன் பிச்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தங்க நிற உடையில்... கண்ணை கட்டும் கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! அதிரி புதிரி போட்டோஸ்!

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணா, பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், விஜய் வசந்த், யோகி பாபு, ரோபோ ஷங்கர், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…