Actress Tamannaah Bhatia : பிரபல நடிகை தமன்னா, பாலிவுட் உலகில் புகழ்பெற்ற நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மா தனது எதிர்வரும் 'மட்கா கிங்' என்ற படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த நிலையில், அவரது காதலியும் பிரபல நடிகையுமான தமன்னா பாட்டியா, தனது ஆசை காதலரை பாராட்டும் வகையில், அத போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து. அவர் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அதற்கு பதில் அளிக்கும் வகையில் "பேபி" என்று பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் வர்மா.

கோலிவுட் உலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கிய நடிகை தமன்னாவும், விஜய்யும் கடந்த 2023ம் ஆண்டு, புத்தாண்டு திருநாளில் முத்தமிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர்களின் உறவு குறித்த வதந்திகள் தொடங்கியது. 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தில் இந்த ஜோடி காதல் வயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாள்.. வெளியாக காத்திருக்கும் 3 மொழி படங்கள்? போட்டியில் வெல்வாரா சிவகார்த்திகேயன்? மோதப்போவது யாருடன்?

இருவரும் ஒருவரையொருவர் டேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், அவர்களது உறவு குறித்து பொதுவெளியில் கிசுகிசுக்கள் அதிகரித்தன. அப்போது தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு நேர்காணலில் விஜய்யுடனான தனது உறவை உறுதிப்படுத்தினார் தமன்னா. அப்போதிருந்து, அவர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் சமூக ஊடக இடுகைகளில் கருத்து தெரிவிக்கிறார்கள் மற்றும் ஒன்றாக பொதுவில் தோன்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram

விஜயின் இந்த புதிய படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ஆனால் இனி தான் அந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் தமன்னா மற்றும் விஜய் ஜோடி திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamannaah House : 80,000 சதுர அடியில் பிரம்மாண்ட பங்களா.. நடிகை தமன்னாவின் வீட்டின் விலை இத்தனை கோடியா?