- Home
- Gallery
- Tamannaah House : 80,000 சதுர அடியில் பிரம்மாண்ட பங்களா.. நடிகை தமன்னாவின் வீட்டின் விலை இத்தனை கோடியா?
Tamannaah House : 80,000 சதுர அடியில் பிரம்மாண்ட பங்களா.. நடிகை தமன்னாவின் வீட்டின் விலை இத்தனை கோடியா?
மும்பையில் நடிகை தமன்னா வசிக்கும் ஆடம்பர பங்களாவின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது

Actress Tamannaah
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Actress Tamannaah pics
2005-ம் ஆண்டு சந்த் சா ரோஷன் சேரா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு ஸ்ரீ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.
Actress Tamannaah viral pics
எனினும் இந்த படங்களில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், கல்லூரி படத்தில் நடித்திருந்த தமன்னாவின் நடிப்புக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது.
Actress Tamannaah latest news
அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழில் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆனார் .
Actress Tamannaah latest
சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. எனவே இந்த படம் பாக்ஸ் ஆபிசிலும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Tamannaah Bhatia
இந்த நிலையில் மும்பையில் நடிகை தமன்னா வசிக்கும் ஆடம்பர பங்களாவின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் ஜூஹு-வெர்சோவா இணைப்பு சாலையில் உள்ள "பேவியூ அபார்ட்மென்ட்" கட்டிடத்தில் தமன்னாவுக்கு ஒரு அழகிய வீடு உள்ளது. சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பிரம்மாண்ட வீட்டின் விலை ரூ.16.6 கோடியாம்.
Actress Tamannaah pics
நவீன மற்றும் அதிநவீன உட்புற வசதிகளும் மிகவும் நேர்த்தியாக இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளதாம். மும்பையை தவிர, சென்னை, ஹைதராபாத்திலும் தமன்னாவுக்கு சொந்தமாக ஆடம்பர வீடுகள் இருக்கிறது.
Actress Tamannaah cute pics
மேலும் பல விலை உயர்ந்த சொகுசு கார்களையும் தமன்னா வைத்திருக்கிறார். அதன்படி ரூ. 75.59 லட்சம் மதிப்புள்ள Land Rover Range Rover Discovery Sport கார் அவரிடம் உள்ளது.
Tamannaah
ரூ. 43.50 லட்சம் மதிப்புள்ள BMW 320i சொகுசு கார், ரூ.1.02 கோடி மதிப்புள்ள Mercedes Benz GLE ஆடம்பர கார், ரூ. 29.96 லட்சம் மதிப்புள்ள Mitsubishi Pajero Sport காரும் தமன்னாவிடம் உள்ளது. தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.120 கோடி என்று கூறப்படுகிறது.