தமிழில், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து, பிரபலமானவர் பாலிவுட் பிரபல நடிகை தபு. 48 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: சேலை கட்டி மனதை வசீகரிக்கும் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..! வாயடைத்து போகும் ரசிகர்கள்!
 

பிரபல நடிகர் ஒருவரை இவர் காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதால் அவரிடத்தில் சற்று விலகியே உள்ளார். எனினும் அந்த நடிகருடன் இணைந்து சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இருவரும் சிறந்த நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் suitable boy என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான புகைப்படம் ஒன்றில், நடிகர் இஷான் கட்டார் மடியில் படுத்து கிடைக்கும் புகைப்படம் வெளியாகி விமர்சனங்களுக்கு ஆளானது.

மேலும் செய்திகள்: இந்த வாய்ப்புக்கு நன்றி... கதாநாயகனுடன் உச்ச கவர்ச்சியில் கட்டி புரளும் ஒடிசா கவர்ச்சி புயல் அப்சாரா ராணி!
 

இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் இஷான் கட்டாருடன் நடிகை தபு, படுக்கையறை காட்சியில் நடித்துள்ளது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். 24 வயது நடிகர் எப்படி 48 வயது நடிகையுடன் இப்படி நடிக்க முடியும் என பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

இந்த படத்தை மிரா நாயர் என்பவர் இயக்கி உள்ளார். தன்யா மணிக்தலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ...