ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏழாம் அறிவு. இதில் சூர்யா இரு வேடங்களில் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தில் சீனா திட்டமிட்டு பரப்பிய வைரஸ் கிருமியால் இந்தியாவில் பரவும் நோயை கட்டுபடுத்த முயல்வார்கள். அதற்காக ஸ்ருதி ஹாசன் மறைந்த போதி தர்மனின் மரபணுக்களை கொண்டு சூர்யாவை பயன்படுத்தி, போதி தர்மனின் ஆற்றல்களை திரும்ப கொண்டுவருவார். அதன் பின்னர் கொடிய வைரஸுக்கு எதிரான மருத்தை சூர்யா கண்டுபிடித்து நாட்டை காப்பார். 

இதையும் படிங்க: "கை" தட்டும் போது கூட ரொமான்ஸா?... நயன் - விக்கி அக்கப்போரு தாங்க முடியலடா சாமி...!

கிட்டத்தட்ட தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் பரவலும் இப்படித்தான். சீனாவில் உருவான  கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கும் இந்த கொடூர வைரஸிற்கு மருத்து கண்டுபிடிக்க உலகின் வல்லரசு நாடுகள் கூட திணறி வருகின்ற்னர். 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் கொரோனாவை வைத்து மீம்ஸ் செய்யும் நெட்டிசன்களின் அட்டகாசத்தை அடக்க முடியாவில்லை. வைரஸின் தீவிரம் தெரியாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் போடும் மீம்ஸ்கள் சமூக ஆர்வலர்களை கடுப்பேற்றியும் வருகிறது. 

இதையும் படிங்க: அஜித்திற்கே தல சுற்றவைத்த தளபதி...“பிகில்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் செய்த மாஸான காரியம்... வைரலாகும் வீடியோ...!

அப்படி மீம்ஸ் கிரியேட்டர்கள் தன்னை வைத்து டிசைன் செய்த மீம்ஸ் ஒன்றை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  வரவு எட்டணா, செலவு பத்தணா படத்தில் இடம் பெற்ற வடிவேலு, கோவை சரளா காமெடியை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ருதி ஹாசனிடம் வடிவேலு இன்னும் 7 நாட்களில் போதி தர்மரை கொண்டு வா என்று கேட்பது போன்று இடம் பெற்றுள்ளது.  நெட்டிசன்கள் தன்னை காமெடியாக கலாய்த்திருந்தாலும், அந்த மீம்ஸ் ஸ்ருதி ஹாசனை மிகவும் கவர்ந்துள்ளது.