உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, சென்னையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிய வந்துள்ளது. இதில், நாளிதழ் நிருபர் ஒருவரும், தொலைக்காட்சி உதவி ஆசிரியர் ஒருவரும் அடங்குவர். இப்போது சென்னையில் மட்டும் 285 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 133 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 108 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 74 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. இந்த கொடூர தொற்றால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் காட்டுத்தீ போல் பரவி கொரோனா தொற்றை தடுப்பதற்காகவே மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். நீண்ட நாட்களாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் திரைப்பிரபலங்கள் அவர்களை உற்சாகமாக வைத்திருப்பதற்காகவும், அவர்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் நாள்தோறும் விதவிதமான புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!

அப்படி சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்த 7ம் அறிவு படத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ந்தார். தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் தனது பழைய புகைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்து வருகிறார். 

இதையும் படிங்க: தங்கை வித்யாவுடன் தளபதி விஜய்... தாறுமாறு வைரலாகும் பேமிலி போட்டோ...!

தற்போது கறுப்பு வெள்ளையில் ஸ்ருதி ஹாசன் ஷேர் செய்துள்ள புகைப்படம் ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது. தொடர் லாக்டவுன் காரணமாக ஜென் நிலைக்கு போயுள்ள மக்கள் வீட்டில்  ஸ்ருதியின் இந்த போட்டோவை பார்த்து கட்டாயம் விழுந்து, விழுந்து சிரித்திருப்பார்கள். அப்படி நவரசங்களையும் காட்டி போட்டோ வெளியிட்டுள்ள ஸ்ருதி ஹாசன், எல்லோரும் எப்படி இருக்கீங்க என்று கேட்டுள்ளார். 

இதையும் படிங்க: தாவணி எங்கம்மா... பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

அதற்கு பலரும் பதிலளித்துள்ளனர். சிலர் ஸ்ருதி ஹாசன் மற்றும் அவரது அப்பா கமல் ஹாசன் ஆகியோர் குறித்து நலம் விசாரித்துள்ளனர்.  நெட்டிசன்கள் பலரும் ஸ்ருதியின் க்யூட் எக்ஸ்பிரசன்ஸை தாராளமாக பாராட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள அந்த போட்டோ சில மணி நேரங்களிலேயே 2 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... 

 

View this post on Instagram

How’s everyone doing ? 🖤

A post shared by @ shrutzhaasan on Apr 19, 2020 at 11:05am PDT