தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக தளபதி ஃபேன்ஸ் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். தளபதி விஜய்யை பொறுத்தவரை குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர். அமைதியின் மறு உருவமாக வலம் வரும் விஜய் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கூட யாரிடமும் சுலபமாக நெருங்கி பழகமாட்டார். கேலி, கிண்டல் செய்து சிரிக்கமாட்டார்  என்ற தகவல்களை நாம் கேட்டிருப்போம். 

சின்ன வயதில் துறுதுறு சிறுவனாக வலம் வந்த விஜய்க்கு வித்யா என்ற தங்கை ஒருவர் இருந்தார். திடீர் உடல்நலக்குறைவால் 2 வயது இருக்கும் போது தங்கை வித்யா இறந்துவிட்டார். தன்னுடன் கலகலப்பாக விளையாடி வந்த தங்கை, எதிர்பாராத நேரத்தில் உயிரிழந்தது சிறுவனான விஜய் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சுட்டியாகவும், துறுதுறுப்பாகவும் இருந்த விஜய், எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட தங்கை வித்யாவின் மரணம் தான் இவரது சுபாவம் அமைதியாக மாற ஓர் காரணமாக அமைந்துவிட்டது.


தங்கையின் மீது அதிக பாசம் கொண்டதால் தான் தங்கை சென்டிமெண்ட் கொண்ட கதைகளில் நடிக்க விஜய் அதிகம் ஆர்வம் காட்டுவாராம். அப்படி விஜய் தங்கச்சி சென்டிமெண்ட் உடன் நடிக்கும் சிவகாசி, திருப்பாச்சி, வேலாயுதம் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடுகின்றன. அதேபோல் தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற பெருமைக்கும் விஜய் சொந்தக்காரர்.

இதையும் படிங்க: பிளாக்கில் சரக்கு விற்பனை... “திரெளபதி” நடிகர் அதிரடி கைது... கையும் களவுமாக போலீசில் சிக்கிய ஆதாரம் உள்ளே...!

தங்கையின் மீது அதிக பாசம் கொண்ட விஜய், வித்யா பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் நிறைய பேருக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கல்வி தொடர்பான பல உதவிகளை வித்யா அறக்கட்டளை மூலமாக தான் விஜய் செய்து வருகிறாராம். அதுமட்டுமின்றி வித்யாவின் பிறந்த தினத்தின் போது இலவச திருமணங்களை விஜய் நடத்தி வைப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தாவணி எங்கம்மா... பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

தற்போது விஜய் தனது அமைதியான குணத்தில் இருந்து மாறி மற்ற ஹீரோக்களைப் போல் ஜாலியாக மாறி வரும் இந்த சமயத்தில் தங்கை வித்யா இறப்பதற்கு முன்பு விஜய் மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்பா அருகில் குட்டி பெண் வித்யாவும், அம்மா அருகே தளபதி விஜய்யும் கூலாக போஸ் கொடுத்திருக்கும் அந்த புகைப்படம் இதோ...