Asianet News Tamil

மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்தா? மௌனம் களைத்த நடிகை ஷர்மிளா மந்திரே!

நடிகையும், புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.என். மந்திரேவின் பேத்தியும் மற்றும் தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகரின் மருமகளுமான ஷர்மிளா மந்திரே ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி,  ஜாகுவார் காரில் மிகவும் வேகமாக வந்து பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியது மட்டும் இன்றி, இந்த விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

actress sharmila mandre open talk about accident
Author
Chennai, First Published Apr 6, 2020, 3:34 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகையும், புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.என். மந்திரேவின் பேத்தியும் மற்றும் தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகரின் மருமகளுமான ஷர்மிளா மந்திரே ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி,  ஜாகுவார் காரில் மிகவும் வேகமாக வந்து பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியது மட்டும் இன்றி, இந்த விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுனந்தா முரளி மனோகர்:

தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜீன்ஸ்', 'ஜோடி', 'மின்னலே'  'தாம் தூம்' போன்ற பட படங்களை தயாரித்துள்ளவர்.

நடிகை ஷர்மிளா:

இவரின் மருமகளான ஷர்மிளா மந்திரே பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.  மேலும் மிரட்டல் படத்தில் நடிகர் வினய்க்கு  ஜோடியாக தமிழில் அறிமுகமானார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்தது.

இதை தொடர்ந்து 'இவானுக்கு எங்கையோ மச்சம் இருக்கு' மற்றும்  'சண்டகரி' போன்ற படங்களை தயாரித்தார். 

மேலும் செய்திகள்: பட வாய்ப்பு வந்ததும்... புது மாப்பிளையை டீலில் விட்டாரா லட்சுமி மேனன்? சோள முத்தா போச்சா...
 

விபத்து:

இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று அதிகாலையில், ஷர்மிளா மந்திரே அவரது ஆண் நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் தனது ஜாகுவார் காரில் வேகமாக சென்றபோது, ​​பெங்களூரு மத்திய வணிக பகுதியான, வசந்த் நகர் அண்டர்பிரிட்ஜில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரயில்வேவுக்கு சொந்தமான இடத்தில் மோதியது.

இதையடுத்து , ஷர்மிளா மற்றும் அவருடைய ஆண் நபர் இருவரும் விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணை:

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பொது சொத்தை சேதப்படுத்தியது மற்றும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில், இப்படி அரசாங்கத்தை மதிக்காமல் நடந்து கொண்டது ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட... அடம் பிடித்த ஸ்ரீதிவ்யாவை அட்வைஸ் பண்ணி ஆப் செய்த நண்பர்கள்!
 

மௌனம் களைத்த ஷர்மிளா:

இதுவரை இந்த விபத்து குறித்து, எந்த ஒரு தகவலையும் கூறாமல் இருந்த நடிகை ஷர்மிளா, தற்போது பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பலர் நான் குடித்து விட்டு கார் ஓட்டி இந்த விபத்தை ஏற்படுத்தியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. இது எதிர்பாராமல் நடந்த விபத்து. விபத்து ஏற்பட்டதும் அதிக வயிற்று வலியால் அவதிப்பட்டேன் எனவே உடனடியாக மருத்துவமனைக்கு நண்பர்கள் உதவியோடு சென்றேன். 

சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவை ஒழிப்போம் என கூறி வரும் நாம் எப்படி இது போன்ற செயல்களில் ஈடுபடுவேன் என நடிகை ஷர்மிளா கூறியுள்ளார். மேலும் இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷுக்கு பாஜக-வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமானமா? உண்மையை போட்டுடைத்த குடும்பம்!
 

எனினும், ஊரடங்கு நேரத்தில் விபத்தை ஏற்படுத்தியதாகவும், பொது சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios