கீர்த்தி சுரேஷ்:

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம், தமிழில் நாயகியாக அவதாரம் எடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கை கொடுத்த சிவகார்த்திகேயன்:

'இது என்ன மாயம்' படம் தோல்வியடைந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் படம் இவருக்கு கை கொடுத்தது. அதே போல் இரண்டாவது முறையாக சிவகார்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த 'ரெமோ' படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

நடிப்பில் நிரூபித்த கீர்த்தி:

கீர்த்தி விக்ரமுக்கு ஜோடியாக நடித்த 'சாமி 2 ', தனுஷுடன் நடித்த 'தொடரி', விஷாலுடன் நடித்த 'சண்டை கோழி 2 ' ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் பல்வேறு விமர்சனங்களில் சிக்கினார்.

இவை அனைத்தையும் முறியடிக்கும் விதமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான, நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான 'மகாநடி' இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது இப்படம்.

தேர்வு செய்து நடிக்கும் கீர்த்தி:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கும் படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் கை வசம் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வரும் 'அண்ணாத்த', மற்றும் 'குயின்' ஆகிய இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் உள்ளது.

கல்யாண பேச்சு:

திரைபடங்களில் கீர்த்தி சுரேஷ் பிஸியாக நடித்து வருவது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு விரைவில் பாஜக வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் என்கிற செய்தியை கொள்ளுதி போட்டார் ஒரு பிரபலம். இது கோலிவுட் திரையுலகையே அதிர செய்தது.

முடிவுக்கு வந்த செய்தி:

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து, அவருடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த தகவலில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. 

காற்றுள்ள போதே ... தூற்றி கொள்வது தானே புத்திசாலித்தனம் இது கீர்த்திக்கு தெரியாத என்ன?