நடிகை லட்சுமி மேனன்:

15 வயதில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக 'சுந்தர பாண்டியன்' என்கிற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன்.

ஒரு பக்கம் படிப்பிலும், மற்றொரு புறம் நடிப்பிலும் மாறி மாறி கவனம் செலுத்தி வந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான, பிலிம் பேர் விருது, தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு, போன்றவை இவருக்கு கிடைத்தது.

கும்கியிலும் அசத்திய லட்சுமி:

'சுந்தர பாண்டியன்' படத்திற்கு பிறகு நடிகை லட்சுமி மேனன் நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய, 'கும்கி' படம் வெளியானது. இந்த படமும் இவருக்கு பல்வேறு விருதுகளை பெற்று தந்தது.

வளர்ந்து  வந்த நடிகை:

இந்நிலையில் லட்சுமி மேனன் முன்னணி நடிகைகள் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு இணையாக வளர்ந்து வந்தார். 

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றது .

வாய்ப்பில்லாமல் தவித்த லட்சுமி மேனன்:

கடைசியாக நடிகை லட்சுமி மேனன் நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 'ரெக்க' படம் வெளியானது. இதை தொடர்ந்து பட வாய்ப்பில்லாமல் இருந்தார்.

டான்ஸ் ஸ்கூல்:

பட வாய்ப்புகள் இல்லாததால், தன்னுடைய சொந்த ஊரான கேரளாவிற்கே சென்ற லட்சுமி மேனன் அங்கு டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் திருமண வயதை எட்டிய இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க தாயாராகி வருவதாகவும் செய்திகள் உலா வந்தன.

மாப்பிள்ளையை  டீலில் விட்டாரா?

நடிகை லட்சுமி மேனனுக்கு, அவருடைய பெற்றோர் டாக்டர் மாப்பிள்ளையை பார்த்து விட்டதாகவும், விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட தயாராகி வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், இப்போது... விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால்... மாப்பிள்ளையை  டீலில் விட்டு விட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.