Actress Shaalin Zoya : தமிழ் மற்றும் மலையாள மொழியில் பல படங்களில் தனது 7வது வயது முதல் நடித்து வரும் நடிகை தான் பிரபல நடிகை ஷாலின் ஜோயா.

கேரளாவின் மலப்புறம் பகுதியில் கடந்த 1997ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி பிறந்தவர் தான் ஷாலின் ஜோயா. கடந்த 2004 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "கொட்டேஷன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக கடந்த 20 ஆண்டுகளாக மலையாள மொழியில் பல படங்களில் நடித்து வருகின்றார். 

ஷாலின் ஜோயா, கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கலையரசனின் "ராஜா மந்திரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். சின்னத்திரை நாடகங்களிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில், இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "கண்ணகி" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

Badava Gopi : ஆறு வயது மகளை பறிகொடுத்த தந்தை - ஆனால் இன்று 260 குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் படவா கோபி!

இயக்குனராகவும் பல குறும்படங்களை இயக்கியுள்ள ஷாலின் ஜோயா, விரைவில் தனது வெள்ளித்திரை படத்தையும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் அவர்களை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது காதல் ததும்பும் புகைப்படங்களையும் வெளியிடுவதுண்டு. 

இந்நிலையில் நேற்று டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலின் ஜோயா பகிர்ந்துள்ளார். இப்பொது அது பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

View post on Instagram

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்து புகழ்பெற்றிருத்தலும், ஷாலின் ஜோயா இப்பொது பங்கேற்றுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.

ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை தான் திருமணம் செய்ய இருந்தாரா? புதிய குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்!