- Home
- Gallery
- ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை தான் திருமணம் செய்ய இருந்தாரா? புதிய குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்!
ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை தான் திருமணம் செய்ய இருந்தாரா? புதிய குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை தான் திருமணம் செய்ய இருந்ததாக, பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறியவர்களில் ஒருவர்தான் ஜெயம் ரவி. 1989 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு தொட்டில் சபதம்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயம் ரவி, அதைத்தொடர்ந்து இரண்டு தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
Jayam Ravi
பின்னர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த கையேடு, 2003 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான, ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவரின் முதல் படமே இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மோகன் ராஜா தன்னுடைய தம்பியின் சினிமா கேரியர் வெற்றிகரமானதாக இருக்க வேண்டும் என்பதால், ஆரம்ப காலத்தில் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்து, ஜெயம் ரவியவே ஹீரோவாக வைத்து இயக்கினார்.
இரண்டே நாளில் 300 கோடியை... நெருங்கிய பிரபாஸின் 'கல்கி 2898 AD'! வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!
அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி - மோகன் ராஜா காம்போவில் வெளியான 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படமும் தரமான வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவு செய்தது. இதை தொடர்ந்து தாஸ், மழை, இதய திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், போன்ற வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு.. பிரபல தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
ஆனால் இதுவரை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்றாலும், இந்த விஷயம் குறித்து பல்வேறு தகவல்கள் மற்றும் இந்த விவாகரத்துக்கு காரணம் என பல வதந்திகள் பரவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, ஜெயம் ரவி ஆர்த்தியை திருமணம் செய்ய வில்லை என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை தான் திருமணம் செய்து கொண்டிருப்பார் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் காதலுக்கு காரணமாக இருந்தவரே நடிகை குஷ்புதான். ஜெயம் ரவிக்கும் ரஜினியின் மகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் சில பேச்சுகள் நடந்ததாகவும், ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து வந்ததாலும், ஜெயம் ரவி பார்ப்பதற்கு சார்மிங்காக இருந்ததாலும் ஆர்த்தியின் அம்மா சுஜாதா இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வமாக இருந்ததாக கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அடுத்தடுத்து பல தகவல்களை கூறி வரும் சபிதா ஜோசப் கூறியுள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
கௌதமி, மனிஷா கொய்ராலா முதல் ஹிரா கான் வரை..! கொடூர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள்!