- Home
- Gallery
- Badava Gopi : ஆறு வயது மகளை பறிகொடுத்த தந்தை - ஆனால் இன்று 260 குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் படவா கோபி!
Badava Gopi : ஆறு வயது மகளை பறிகொடுத்த தந்தை - ஆனால் இன்று 260 குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் படவா கோபி!
Badava Gopi : கடந்த 25 ஆண்டுகளாக கலையுலகில் பயணித்து வரும் மிகசிறந்த கலைஞன் தான் படவா கோபி. ஆனால் அவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சோகமும் உள்ளது.

haritha
சென்னையில் கடந்த 1967ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி பிறந்த படவா கோபிக்கு வயது 56. இவரை சின்னத்திரை நடிகர், வெள்ளித்திரை நடிகர், ஸ்டாண்ட் அப் காமெடியன், மிமிக்ரி கலைஞர், மேடை கலைஞர் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இவை அனைத்திற்கும் சொந்தக்காரர் தான் படவா கோபி. கடந்த 1999ம் ஆண்டு ஒளிபரப்பான "கலாட்டா சிரிப்பு" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் கோபிநாத் என்கின்ற படவா கோபி.
Mimicry Artist
அதன் பிறகு மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்திரன் "பொய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2006ம் ஆண்டு திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் படவா கோபி. மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. இயல்பாகவே பிறரை சிரிக்க வைக்கும் இயல்பை கொண்ட படவா கோபியின் வாழ்க்கையில் கடந்த 2007ம் ஆண்டு ஒரு பெரும் சோதனை ஒன்று ஏற்பட்டது.
Badava Gopi
ஹரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோபிக்கு, கடந்த 2002ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 2007-ம் ஆண்டு, படவா கோபி ஹரிதா ஜோடி தங்கள் 5 வயது அன்பு மகளை இழந்தனர். அதிலிருந்து மீண்டு வரவே அவர்களுக்கு பல காலம் எடுத்து.
Haritha gopi
இந்த சூழ்நிலையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து தற்பொழுது அந்த ஜோடி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல், 250க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான அனைத்து செலவையும் இப்போது செய்து வருகின்றார்கள். இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது என்றே கூறலாம். Aadhy Hug Trust என்ற பெயரில் அவர்கள் இந்த சேவையை செய்து வருகின்றனர்.