Asianet News Tamil

துணை நடிகையின் பாலியல் புகார்... முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஊழியர்களிடம் விசாரணை!

துணை நடிகை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்துள்ள பாலியல் புகாரில், ஜூன் 9 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அமர்ச்சரின் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

actress sexual complaint Inquiry into former minister Manikandan staff
Author
Chennai, First Published Jun 9, 2021, 11:46 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

துணை நடிகை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்துள்ள பாலியல் புகாரில், ஜூன் 9 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அமர்ச்சரின் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: நயன்தாராவின் 'இதுவும் கடந்து போகும்' பாடல் வெளியானது..! வீடியோ...
 

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசிய குடியுரிமை பெற்ற இவர், மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் அவரது நண்பர் பரணி என்பவர் மூலம் நடிகைக்கு நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். முதலில் அமைச்சரின் ஆசைவார்த்தையை ஏற்க மறுத்த நடிகை பிறகு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்த்தில், நடிகை 3 முறை கருவுற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் மணிகண்டன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மணிகண்டன் பலமுறை நடிகை சாந்தினியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பாக சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், பாலியல் வன்முறை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: 3 நொடியில் காதலில் விழுந்து விட்டேன்... தன் செல்லத்தை அறிமுகம் செய்து இளம் நெஞ்சங்களை ஏங்க விட்ட ராஷ்மிகா!
 

இதையடுத்து இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரை விசாரித்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம் , பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்: 'பிரேமம்' படத்தில் இருந்து பிரபல நடிகை விலகியதால்... சாய்பல்லவிக்கு அடித்த ஜாக்பார்ட்..!
 

இவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்த போது, மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில்,  ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்... தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரபலமானவர்களை டார்கெட் செய்து நடிகை தொடர்ந்து பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், மலேஷியாவில் பலரை அவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். இவரது முன் ஜாமீன் மீதான மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 9 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தடை விதித்தது.

இந்நிலையில், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்ன அமைச்சர் மணிகண்டனின் ஊழியர்களிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் இன்று அவரது பாதுகாவலர், மற்றும் உதவியாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையை தொடர்ந்து, நடிகையின் பாலியல் வழக்கில் பல்வேறு திருப்புமுனை ஏற்படும் என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios