Asianet News Tamil

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: இளம் நடிகை மனித உரிமை ஆணையத்தில் புகார்...!

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Actress Sanam Shetty Compalaint Sathankulam Father and son Death to Human Rights Commission
Author
Chennai, First Published Jun 27, 2020, 3:45 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரத்தில் கடை திறந்து வைத்திருந்ததாகக்கூறி, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இதனிடையே, ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும், அவரது மகன் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் இறந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவரும், பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலியுமான சனம் ஷெட்டி இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழில் ‘அம்புலி’ படம் மூலம் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இதையடுத்து ‘சவாரி’, ‘வால்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தர்ஷனும், சனம் ஷெட்டியும் காதலித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பிரேக் அப்பிற்கு பிறகு மாடலிங், சினிமாவில் சனம் ஷெட்டி கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஹன்சிகா, சிம்பு நடித்த ‘மஹா’ படத்தில் கூட சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

 

 

இதையும் படிங்க: ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...! 

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த சாத்தான்குளம் விவகாரம் குறித்து நடிகை சனம் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். புகாருக்கான ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்துள்ள சனம் ஷெட்டி, அனைவரும் இதேபோல் புகாரளியுங்கள் அப்போது தான் அழுத்தம் அதிகமாகும், விரைவில் நீதி கிடைக்கும் என அதிரடி கோரிக்கை வைத்துள்ளார். 

View this post on Instagram

I have officially registered my complaint against the accused police officers in the Jeyraj and Bennicks case (the name was wrongly mentioned earlier by the press now corrected) with the Human Rights Commission of India. . Dear friends I request all of you to raise the complaint which will certainly increase chances for effective action in the issue🙏 . The link for web complaint registration as below: https://hrcnet.nic.in/HRCNet/public/webcomplaint.aspx Please use the weblink to fill in details and submit. Check my story to goto the link directly. . You will receive an sms as registration confirmation. Names, place and incident details can be found in all the news writeups regarding the issue. . #justiceforjeyrajandfenix #murdercharges #humanrightscommission #humanrightscomplaint #doyourbit

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on Jun 26, 2020 at 11:50pm PDT

 

Follow Us:
Download App:
  • android
  • ios