தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. பக்கா சென்னை பொண்ணான சமந்தா, மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் வைத்தார். பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் சமந்தா. 

இதையும் படிங்க: அவசர, அவசரமாக ரகசிய திருமணம் செய்தது ஏன்?... முதன் முறையாக மனம் திறந்த யோகிபாபு...!

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு திரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, "சூப்பர் டீலக்ஸ்" படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சீமராஜா, விஷாலுக்கு ஜோடியாக இரும்புத்திரை, ராம் சரண் உடன் தெலுங்கில் நடித்த ரங்கஸ்தலம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின. 

இதையும் படிங்க: "மடியில கனமில்ல... வழியில பயமில்ல"... ஐ.டி.ரெய்டை அடுத்து விஜய் செய்த காரியம்...!

இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சமந்தா. தற்போது தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்துள்ளார். அந்த படம்  இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகி, ரசிகர்களிடையே சிறப்பான  வரவேற்பை பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: மருமகன் தனுஷ் போட்ட ட்வீட்டிற்கு மாமனார் ரஜினியை திட்டும் நெட்டிசன்கள்...!

இந்த சந்தோஷமான தருணத்தில் சமந்தா வெளியிட்ட அதிரடி அறிவிப்பை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர். ஆமாங்க... அப்படி சமந்தா என்ன சொன்னாங்க தெரியுமா?... ஜானு புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா, இன்னும் 2,3 ஆண்டுகள் மட்டும் தான் சினிமாவில் நடிப்பேன். இனி குடும்பம் பற்றி யோசிக்க முடிவு செய்துள்ளேன் என்று தடலாடியா சொல்லிட்டாங்க. என்ன சம்மு இப்படி சொல்லிட்டீங்க...! இதனால எத்தனை ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சோ தெரியலை.