தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் யோகிபாபு, கடந்த 6ம் தேதி கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சோசியல் மீடியாவில் வதந்தியாக மட்டும் இல்லாமல், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகவும் இருந்தது யோகிபாபுவின் திருமணம். ஆனால் திடீரென வந்தவாசி அருகேயுள்ள மேல்நகரம்பேடு என்ற கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் காதும், காதும் வைத்த மாதிரி மணப்பெண் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இதையும் படிங்க: "மடியில கனமில்ல... வழியில பயமில்ல"... ஐ.டி.ரெய்டை அடுத்து விஜய் செய்த காரியம்...!

இதுவரை யோகிபாபுவின் இந்த திடீர் திருமணத்திற்கு காரணம் தெரியாமல் ரசிகர்களும், திரைத்துரையினரும் திண்டாடி வந்த நிலையில், ரகசிய திருமணத்திற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் யோகிபாபு. 

எதிர்பாராத குடும்ப சூழல் காரணமாக தனது திருமணத்தை அவசர நிலையில் நடந்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இரு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசியே இந்த முடிவை தான் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ள யோகிபாபு, திரைத்துறையினர் அனைவரையும் அழைத்து சிறப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: நடிகர் விஜய்யை துருவி, துருவி விசாரிப்பது ஏன்?... விளக்கமளித்த வருமான வரித்துறை...!

மேலும் தொலைபேசி மூலமாகவும், சோசியல் மீடியாவிலும் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள யோகிபாபு, மார்ச் மாதம் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரையும் முறைப்படி அழைத்து அவர்களது வாழ்த்துக்களை பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.