சூர்யா நடித்து வரும் ' NGK ' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார், நடிகை சாய் பல்லவி. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி இயக்குனர்களும் இவரிடம் கதை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது..." நான் டாக்டருக்கு படித்து விட்டு, நடிக்க வந்து விட்டேன். சினிமாவுக்கு திட்டம் போட்டு வரவில்லை. இந்த துறையில் தினமும் புதுமையான விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் இருக்கும் வரை நடிப்பேன். மார்க்கெட் குறைந்தால் என்னுடைய டாக்டர் தொழிலை பார்க்க சென்று விடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு சுற்றுப்பயணம் பிடிக்கும். நடனத்திலும் விருப்பம் உள்ளது.  நடித்த படங்களில் வித்தியாசமான படம் 'தியா' ஒரு தாயாக நடித்தேன். இந்த படம் மூலம் என்னை மேலும் மெருகேற்றி கொண்டேன். மாற்றங்களை நான் விரும்புவது இல்லை. ஒரே மாதிரி உணவை சாப்பிடுவேன். சிறுவயதிலிருந்து பழகியவர்களுடன் தான் நட்பாக இருப்பேன்.

ஆனால் சினிமா தொழில் இதற்கு வித்தியாசமானது. எல்லாவித கதாபாத்திரங்களையும் செய்ய ஆசை இருக்கிறது. நான் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. எல்லோருக்கும் ஒரு கருத்து கொடுக்கிற கதையில் நடிக்க ஆசை இருக்கிறது." இவ்வாறு சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.