“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். 

இதையும் படிங்க: புரட்டி எடுத்த நெட்டிசன்கள்... கைவிட்ட பாலிவுட் ஸ்டார்... அடுத்தடுத்த சறுக்கலால் அதிரடி முடிவெடுத்த அட்லீ...!


ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதையடுத்து விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து சோசியல் மீடியாவில் பாப்புலர் நபராக வலம் வருகிறார். இடையே விஜய் தொலைக்காட்சி நடத்திய “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் கலந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். சமீபத்தில் கூட சட்டை பட்டனை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த தாறுமாறு போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்தது. அந்த புண்ணியத்தில் தற்போது ரம்யா பாண்டியன் இரண்டு படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: பிரபல டி.வி. தொகுப்பாளினி மீது வீடு புகுந்து தாக்குதல்... கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட பரிதாபம்...!

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு மனதிற்கு நெருக்கமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து தங்களது பழைய நினைவுகளை ரசிகர்கள் உடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் ரம்யா பாண்டியன் தனது சித்தப்பா அருண் பாண்டியன் உடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

தமிழ் சினிமாவில் முன்னணின் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் அருண் பாண்டியன். ஊமை விழிகள், இணைந்த கைகள் உட்பட இவர் நடித்த ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட்டடித்தவை. ஹாலிவுட் அர்னால்டு போல் கோலிவுட்டில் கட்டுமஸ்தான தேகத்திற்கு சொந்தக்காரர். சித்தப்பா அருண் பாண்டியன் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள ரம்யா பாண்டியன் ஹேண்ட்ஸம் ஜென்டில்மேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரம்யா பாண்டியனின் பட வாய்ப்புகளை தனது மகளின் படவாய்ப்பிற்காக அருண் பாண்டியன் கெடுத்து வருவதாக வதந்தி பரவிய நிலையில், இந்த புகைப்படம் நல்ல ஒரு பதிலடியாக அமைந்துள்ளது.