ராஜமாதா சிவகாமி தேவியின் அழகிய கிக் போஸ்கள்...வயதான அடையாளமே இல்லையே!
52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் தற்போது வண்ண வண்ண உடைகளில் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னட மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் 260 க்கு மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளவர் தான் ரம்யா கிருஷ்ணன். நந்தி விருதுகள், தமிழ்நாடு திரைப்பட விருது, பிலிம்பேர் விருது என எக்கச்சக்க விருதுகள் கைவசம் வைத்துள்ளார். படையப்பாவே நீலாம்பரியாக வந்த பிறகே இவரது புகழ் எங்கோ சென்று விட்டது என்று கூட கூறலாம்.
1983 ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தமிழில் முன்னணி நாயகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சிகரமாக நடிப்பது ஐட்டம் டான்ஸ் ஆடுவது என அன்றைய ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்து வைத்திருந்த இவர். நீலாம்பரி வேடத்திற்காக பல விருதுகளை பெற்றிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
மேலும் செய்திகளுக்கு...குட்டை உடையுடன் வெளிநாட்டில் கலக்கும் திவ்யபாரதி ..கூல் கிளிக் இதோ
தற்போது காமியோ ரோலில், அம்மா, அக்கா, வில்லி போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி பார்ட் 1, பார்ட் 2 இரண்டிலுமே கலக்கி இருந்தார். ராஜமாதா சிவகாமி தேவிகா வந்து ரசிகர்களின் மனதில் குடிகொண்டு விட்டார் ரம்யா கிருஷ்ணன். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடித்த வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...அரவிந்த்சாமியின் ரெண்டகம்... படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்
இறுதியாக இவர் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகி இருந்த லிகர் படத்தில் நாயகனின் தாயாக வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டார். இதற்கிடையே ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தோன்றி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். 52 வயதாகும் இவர் தற்போது வண்ண வண்ண உடைகளில் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.