மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகள் இருவர், திருமணம் ஆகும் முன்பே தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு அப்படத்தை புரமோட் செய்வது முக்கியமான ஒன்று. அப்படி தற்போது வெளியாகும் படங்களெல்லாம் புரமோஷனுக்காக கோடிக்கணக்கில் செலவழிப்பதும் உண்டு. ஒரு சிலரோ சர்ச்சைக்குரிய வகையில் புரமோட் செய்து, தங்களது படத்தைப் பற்றி பரபரப்பாக பேசை வைத்துவிடுவார்கள்.

கடந்த ஆண்டு கூட நடிகை வனிதா, தான் பவர் ஸ்டார் உடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். இதைப்பார்த்த பலரும் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் போல என நினைத்து வாழ்த்துக்களையெல்லம் தெரிவித்தனர். ஆனால் இறுதியில் அது தாங்கள் நடிக்கும் படத்தின் போஸ்டர் என கூறி அதிர்ச்சி கொடுத்தார் வனிதா.

இதையும் படியுங்கள்... என்னது விஜய் தேவரா கொண்டாவிற்கு திருமணம் முடிந்து விட்டதா? ரசிகைகளின் மனதை உடைத்த ஜான்வி கபூர்

தற்போது மலையாள திரையுலகிலும் இதுபோன்ற ஒரு நூதன முறையிலான புரமோஷன் தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பார்வதியும், நித்யா மேனனும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதை கண்டறியும் கருவியும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். அந்த கருவியில் இரண்டு கோடுகள் வந்தால் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என அர்த்தம். அதேபோல் அவர்கள் பதிவிட்ட புகைப்படத்திலும் இரண்டு கோடுகள் இருந்தததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

View post on Instagram

இதை உண்மை என நினைத்து சிலர் வாழ்த்துக்களையெல்லாம் சொல்லத்தொடங்கிவிட்டனர். உண்மையில் பார்வதி, நித்யா மேனன் இருவருமே திருமணமாகாதவர்கள். அப்படி இருக்கையில் எப்படி கர்ப்பமாகி இருக்க முடியும் என சிலர் கேள்வி எழுப்ப, இறுதியில் அது அவர்கள் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்காக இப்படி செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதை அறிந்து கடுப்பான நெட்டிசன்கள், புரமோஷனுக்காக இப்படியா செய்வது என திட்டி வருகின்றனர். 

View post on Instagram

பார்வதி, நித்யா மேனன் இருவருமே தமிழில் தனுஷுடன் இணைந்து பணியாற்றி உள்ளனர். பார்வதி மரியான் படத்திலும், நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஷாருக்கான் படமே ரிலீஸ் ஆகல அதற்குள் இன்னொரு இந்தி படமா! பாலிவுட்டில் அட்லீக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்