MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாருக்கான் படமே ரிலீஸ் ஆகல அதற்குள் இன்னொரு இந்தி படமா! பாலிவுட்டில் அட்லீக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்

ஷாருக்கான் படமே ரிலீஸ் ஆகல அதற்குள் இன்னொரு இந்தி படமா! பாலிவுட்டில் அட்லீக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்

ஜவான் படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது அட்லீக்கு மேலும் ஒரு பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Oct 28 2022, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அடுத்ததாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அந்த வகையில் விஜய்யும், அட்லீயும் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய படம் தான் தெறி, தாணு தயாரித்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. அட்லீயுடன் பணியாற்றும் அனுபவம் பிடித்துப் போனதால், அடுத்தடுத்து தனது மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விஜய். இந்த இரண்டு படங்களும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு இந்த கூட்டணிக்கு ஹாட்ரிக் ஹிட்டையும் கொடுத்தது.

இதையும் படியுங்கள்... ‘சாக்லேட் பாய்’னா சும்மாவா.. ஹரீஷ் கல்யாண் திருமணத்தில் குவிந்த ஹீரோயின்ஸ்- யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?

34

தமிழில் அடுத்தடுத்து நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீக்கு அடுத்ததாக கிடைத்தது தான் ஜாக்பாட் வாய்ப்பு. முன்னணி இயக்குனர்கள் பலர் பணியாற்ற துடிக்கும் நடிகர்களுள் ஒருவரான ஷாருக்கான், தனது தயாரிப்பிலேயே ஒரு படத்தை இயக்க அட்லீக்கு வாய்ப்பளித்தார். அந்த படம் தான் தற்போது ஜவான் என்கிற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட ஏராளமான பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

44

இன்னும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கே முடிவடையாத நிலையில், தற்போது அட்லீக்கு மேலும் ஒரு பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அந்த வகையில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான் கான், தனது அடுத்த பட வாய்ப்பை அட்லீக்கு கொடுக்கும் முனைப்பில் இருக்கிறாராம். இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சக்சஸ் ஆனால் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Abhirami Venkatachalam : வேற லெவலில் சூப்பர் மாடல் போஸ் கொடுத்த அபிராமி வெங்கடாசலம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
சல்மான் கான்
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image2
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image3
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved