- Home
- Cinema
- ‘சாக்லேட் பாய்’னா சும்மாவா.. ஹரீஷ் கல்யாண் திருமணத்தில் குவிந்த ஹீரோயின்ஸ்- யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
‘சாக்லேட் பாய்’னா சும்மாவா.. ஹரீஷ் கல்யாண் திருமணத்தில் குவிந்த ஹீரோயின்ஸ்- யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஹரீஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகைகளும் கலந்து கொண்டனர்.

மாதவன், பிரசாந்த், அப்பாஸ் ஆகியோருக்கு பிறகு தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்கிற அந்தஸ்தை பெற்ற ஹீரோ என்றால் அது ஹரீஷ் கல்யாண் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்று தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருவபவர் ஹரீஷ் கல்யாண்.
இளம்பெண்களின் மனதில் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரீஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
அவர் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... கோலாகலமாக நடந்த நடிகர் ஹரீஷ் கல்யாண் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ
குறிப்பாக ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்ஸும், அவரின் நெருங்கிய தோழிகள் சிலரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகைகள் அதுல்யா ரவி, இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோர் நேரில் வந்து ஹரீஷ் கல்யாணை வாழ்த்தினர்.
இதில் அதுல்யா, ஹரீஷ் கல்யாணுடன் டீசல் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார். அதேபோல் பிந்து மாதவியும், இந்துஜாவும் ஹரீஷின் நெருங்கிய தோழிகள் ஆவர்.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தான் ஹரீஷ் கல்யாணும், பிந்து மாதவியும் நண்பர்களாகினர். அந்நிகழ்ச்சி முடிந்து 5 ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்களது நட்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரேஸில் இணைந்த அஜித்... ‘வாரிசு’க்கு எதிராக ‘துணிவு’டன் களமிறங்கும் உதயநிதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.