இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நியூ லுக் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையும் படிங்க: வெளி வந்தது அமலா பாலின் காதல் ரகசியம்.... காத்து போக கூட இடம் விடமா காதலருடன் எப்படி இருக்கார் பாருங்க...!

அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அந்த பாட்டும் பட்டி, தொட்டி எல்லாம் செம்ம ஹிட்டானது. 

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீனா, குழந்தை பிறந்த பிறகு ஓவராக வெயிட் போட்டு குண்டானார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்‘முத்து’, ‘வீரா’,‘எஜமான்’ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மீனா, 24 வருடங்களுக்குப் பிறகு “அண்ணாத்த” படத்தில் இணைந்துள்ளார். 

இதையும் படிங்க: மறைக்க வேண்டிய அங்கத்தை அப்பட்டமாக காட்டி... கேவலமாக போஸ் கொடுத்த விஜய் பட நாயகி...!

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மீனா தான் ஜோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நியூ லுக் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் தனது உடல் எடையை கணிசமாக குறைந்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார் மீனா. மீண்டும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி தோற்றத்திற்கே மாறியுள்ள மீனா, அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். மீனாவின் அசத்தல் போட்டோஸ் இதோ...