தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய்யின் தலைவா படத்தில் நடித்து கொண்டிருந்த போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என விஜய் கூறியதாகவும், அதை முதலில் ஏற்றுக்கொண்ட அமலா பால் பின்னர் படங்களில் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர். 

அதன் பின்னர் மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்த ஆடை திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். 

விவாகரத்திற்கு பிறகு முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அமலா பால், ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வந்தன. வடநாட்டு இசைகலைஞரான அவரது பெயர் பவிந்தர் சிங் என்பது தெரியவந்துள்ளது. அவரை காற்று கூட புகமுடியாத அளவிற்கு அமலா பால் இறுக்கி கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதுமட்டுமின்றி அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமலா பால் தனது காதல் பற்றிய உறுதியான தகவலை என்று அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.