நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன்... திருமண நாளில் உருகிய மீனா - ஆறுதல் கூறும் ரசிகர்கள்
Meena : நடிகை மீனாவின் திருமண நாளான இன்று, அவர் தனது கணவர் குறித்து கடந்த ஆண்டு போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். அந்த ஆண்டு ஜூலை 12-ந் தேதி தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் 28-ந் தேதி காலமானார். அவரது திடீர் மறைவு மீனாவின் குடும்பத்தினரையும், திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏராளமான சினிமா பிரபலங்கள் வித்யாசாகர் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர் படத்துக்காக லுக்கை மாற்றிய தனுஷ்... வெறித்தனமா இருக்கே என சிலாகிக்கும் ரசிகர்கள்
இன்று நடிகை மீனா - வித்யாசாகர் ஜோடிக்கு 13-வது திருமண நாளாகும். இந்த முக்கியமான நாளில் கணவர் இன்றி தவித்து வரும் நடிகை மீனாவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை மீனா தனது கணவர் குறித்து கடந்த ஆண்டு போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.
அதில், நீ என் வாழ்வில் வானவில் போல வந்து, என் வாழ்க்கையை மிகவும் வண்ணமையமாக்கினாய். சேர்ந்து இருப்பது தான் அற்புதமானது. எனக்கு பிடித்த இடமும் அது தான். நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என உருக்கமாக பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் தைரியமாக இருக்குமாறு அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று