துறவறம் ஏற்றுக் கொண்ட நடிகை மம்தா குல்கர்னி: ஏன் இந்த திடீர் மாற்றம்?

Mamta Kulkarni Becomes Mahamandleshwar at Mahakumbh 2025 : 90களின் பிரபல நடிகை மம்தா குல்கர்னி, கின்னர் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பட்டம் ஏற்று, மம்தா நந்த கிரி என பெயர் மாற்றிக் கொண்டார். இந்த ஆன்மீகப் பயணத்திற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். 

Actress Mamta Kulkarni Becomes Mahamandleshwar at Mahakumbh 2025 rsk

மகா கும்பமேளாவில் மம்தா குல்கர்னி:

Mamta Kulkarni Becomes Mahamandleshwar at Mahakumbh 2025 : தளபதி விஜய்யின் அம்மா இயக்குநர் ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான படம் தான் நண்பர்கள். இந்தப் படத்தில் நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், நாகேஷ், மனோரமா, சங்கீதா, குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை விஜய் தான் தயாரித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது. படத்திற்கு இசை சங்கீதா ராஜன். இந்தப் படத்திற்கு பிறகு மம்தா குல்கர்னி தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

ரூ.2000 கோடிக்கு அதிபதியான தில் ராஜூ வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்!

கடைசியாக 2003 ஆம் ஆண்டு Shesh Bongsodhar என்ற பெங்காலி படத்தில் நடித்தார்.  90களின் பிரபல நடிகை மம்தா குல்கர்னி வெள்ளிக்கிழமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாக ஒரு அசாதாரண முடிவை எடுத்தார். கின்னர் அகாடாவின் மகா மண்டலேஷ்வர் பட்டத்தை ஏற்றுக்கொண்ட அவர், தனது பெயரை மம்தா குல்கர்னியிலிருந்து மம்தா நந்த கிரி என மாற்றிக் கொண்டார். கழுத்தில் ருத்ராட்சம் மற்றும் காவி உடை அணிந்த மம்தா, புதிய ஆன்மீகப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.

திருமணம் எப்போன்னு கேட்டது குத்தமா? சரவெடியாய் பொரிந்து தள்ளிய ஸ்ருதி ஹாசன்!

இந்த திடீர் மாற்றம், மம்தா தனது வாழ்க்கையின் திசையை ஏன் மாற்றினார் என்ற கேள்வியை எழுப்புகிறது. மகா மண்டலேஷ்வர் ஆவதற்கு எப்படி முடிவெடுத்தார்? இந்தப் புதிய ஆன்மீகப் பயணம் குறித்து மம்தா குல்கர்னி மனம் திறந்து பேசினார். ஊடக செய்திகளின்படி, மம்தா கூறுகையில், “இது அனைத்தும் மகா காலன் மற்றும் ஆதிசக்தியின் விருப்பம். நேற்றுதான் எனக்கு மகா மண்டலேஷ்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று யோசிக்க ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டேன். கின்னர் அகாடாவில் எந்த கட்டுப்பாடும் இல்லை, இங்கு சுதந்திரமாக மத சடங்குகளை செய்யலாம் என்று தெரிந்ததும், இந்த முடிவை எடுத்தேன் என்றார்.

'குடும்பஸ்தனாக' ரசிகர்கள் மனதை கவர்ந்தாரா மணிகண்டன்? முதன் நாள் வசூல் விவரம் இதோ!

மகா மண்டலேஷ்வர் ஆவதற்கான நடைமுறை என்ன?

இது குறித்து மம்தா கூறுகையில், “மகா மண்டலேஷ்வர் ஆவதற்கான நடைமுறை, ஒருவர் பட்டப்படிப்பு பெறுவது போலத்தான். அதுபோலவே, 23 ஆண்டுகள் தவம் செய்த பிறகு, மகா மண்டலேஷ்வர் பட்டம் எனக்கு கிடைத்துள்ளது. இதை எனது சாதனையாக கருதுகிறேன் என்றார்.

மகா கும்பமேளாவில் எவ்வளவு காலம் தங்குவார் மம்தா?

மம்தா குல்கர்னி பிப்ரவரி 1ஆம் தேதி வரை மகா கும்பமேளாவில் கல்பவாசம் மேற்கொண்டு தவம் செய்வார். இந்தக் காலம் அவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும். தியானம், தவம் மற்றும் மன அமைதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios