ரூ.2000 கோடிக்கு அதிபதியான தில் ராஜூ வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்!
Dil Raju Net Worth Car Collection Details : தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
Dil Raju Net Worth Car Collection Details : தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தில் ராஜூ. இவர், தெலுங்கு சினிமாவில் 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தில் படத்தை தயாரிப்பாளர் கிரி உடன் இணைந்து தயாரித்திருந்தார். இவருடைய உண்மையான பெயர் வெலமகுச்சா வெங்கட ரமண ரெட்டி. சினிமாவிற்கு வந்ததைத் தொடர்ந்து தில் ராஜூ என்று மாற்றிக் கொண்டார். இதில் தில் என்பது அவர் தயாரித்த முதல் படத்தின் பெயர்.
சாகும் முன் பவதாரிணி வெளிப்படுத்திய கடைசி ஆசை! கலங்கியபடி கூறிய கணவர் சபரிராஜ்!
அதன் பிறகு ஆர்யா, பத்ரா, நேனு லோக்கல், லவ்வர், மகரிஷி, ஜானு, சரிலேரு நீகேவரு, வாரிசு ஃபேமிலி ஸ்டார், கேம் சேஞ்சர் என்று பல படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் தான் தில் ராஜூவிற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கடந்த 4 நாட்களாக மேற்கொண்டு வந்த சோதனைகள் இப்போது நிறைவு பெற்றுள்ளது. இதில், முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் 2 நாட்களில் மட்டும் தில் ராஜூவிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.26 கோடி ரொக்கப் பணம், கணக்கில் காட்டப்படாத ரூ.200 கோடிக்கும் அதிகமாக உள்ள சொத்துக்களின் ஆவணங்கள் என்று பலவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் எப்போன்னு கேட்டது குத்தமா? சரவெடியாய் பொரிந்து தள்ளிய ஸ்ருதி ஹாசன்!
கடந்த 2 வருடங்களில் படங்களுக்கான வரவு, செலவு விவரங்களில் அரசுக்கு செலுத்தப்பட்ட வரியில் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தில் ராஜூ வீட்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தில் ராஜூ இதுவரையில் 50க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார். இவருக்குஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர சொகுசு பங்களா இருக்கின்றன. அதோடு, ரிசார்ட்டுகளும் இருப்பதாக கூறப்படுகிறது. சொந்தமாக 40 திரையரங்குகள், பிஎம்டபிள்யூ கார் உள்பட பல சொகுசு கார்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் தான் தில் ராஜூ ரூ.2000 கோடி சொத்துக்கு அதிபதியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
'குடும்பஸ்தனாக' ரசிகர்கள் மனதை கவர்ந்தாரா மணிகண்டன்? முதன் நாள் வசூல் விவரம் இதோ!