Asianet News TamilAsianet News Tamil

Madonna Sebastian : மடோனாவுக்கு என்ன தான் ஆச்சு? பீச்சில் கவர்ச்சி புயலாக மையம் கொண்ட நாயகி - வைரல் வீடியோ!

Actress Madonna Sebastian : பிரபல நடிகை மடோனா செபஸ்டியன் இறுதியாக தமிழில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

Actress Madonna Sebastian hot pose in beach video viral in social media ans
Author
First Published May 26, 2024, 10:43 PM IST

கடந்த 1992 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சேரப்புழா என்கின்ற இடத்தில் பிறந்த நடிகை தான் மடோனா செபாஸ்டியன், சிறு வயது முதலையே இசை மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் கர்நாடக மற்றும் மேற்கத்திய இசைகளை கற்றுக் கொண்டார். இசைக்குழுக்களில் இணைந்து தனது இசை திறமையை மேலும் வளர்த்துக்கொண்டார் மடோனா. 

மலையாள மொழியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமான மடோனா செபஸ்டின் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள உலகத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான பிரேமம் திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படம் மடோனாவிற்கு பெரிய அளவில் வரவேற்ப்பு கொடுத்தது.

Sakshi : வில்லேஜ் பியூட்டியாக மாறிய மாடர்ன் மங்கை.. சொக்க வைக்கும் போஸில் சாக்ஷி அகர்வால் - கியூட் பிக்ஸ்!

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "காதலும் கடந்து போகும்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை மடோனா செபாஸ்டின் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பும் உள்ளது.  

இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்த மடோனா செபாஸ்டின் தற்பொழுது தமிழில் உருவாகி வரும் "ஜாலியோ ஜிம்கானா" மற்றும் "அதிர்ஷ்டசாலி" உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். விரைவில் அந்த படங்கள் வெளியாகவுள்ளது.

திரையில் மிகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடித்து வந்த மடோனா இப்பொது கவர்ச்சி புயலாக மாறியுள்ளார் இந்த சூழ்நிலையில் கடற்கரை மணலில் கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Indian 2 : அட்ரா சக்க.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? பக்கா பிளானில் ஷங்கர் - வெளியான சுவாரசிய அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios