- Home
- Gallery
- Indian 2 : அட்ரா சக்க.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? பக்கா பிளானில் ஷங்கர் - வெளியான சுவாரசிய அப்டேட்!
Indian 2 : அட்ரா சக்க.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? பக்கா பிளானில் ஷங்கர் - வெளியான சுவாரசிய அப்டேட்!
Indian 2 Update : பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.

Indian Senapathy
உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன். சேனாபதி என்கின்ற சுதந்திர போராட்ட வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் மிக நேர்த்தியாக அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Shankar
இந்நிலையில் சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூலை மாதம் 12ம் தேதி உலக அளவில் வெளியாகிகிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரபல நடிகை காஜல் அகர்வால், மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
Anirudh
வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஏற்கனவே "பாரா" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் அனிருத் இசையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
Siddharth
இந்நிலையில் சினிமா விமர்சகர் அமுத பாரதி வெளியிட்ட தகவலின்படி நடிகர் சித்தார்த் நாட்டில் உள்ள அநீதிகளை குறித்து இணையத்தில் வீடியோ வெளியிடும் நபராக இருக்க, பின் அவருக்கு வரும் இன்னல்களில் இருந்து அவரை காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார் இந்தியன் தாத்தா சேனாபதி. அதன் பிறகு அநீதிகள் அழிக்கப்பட்டதா என்பது தான் கதையின் முடிவு.