மக்கள் செல்வனுக்கு மவுசு இல்லையா! அதளபாதாளத்துக்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி; சீரியலை விட கம்மியாம்
Bigg Boss Tamil Season 8 TRP : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி டிஆர்பியில் சிறகடிக்கை ஆசை சீரியலை விட கம்மியான ரேட்டிங் வாங்கி உள்ளது.
Vijay Sethupathi
விஜய் டிவியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது 8-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். பல்வேறு புதுமைகளுடன் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Bigg Boss Tamil season 8
கடந்த ஆண்டு பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் போட்டி நடைபெற்றது. ஆனால் இம்முறை வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு, ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமுமாக பிரிக்கப்பட்டு அவர்கள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த சீசன் இருந்த அளவு கூட பரபரப்பும் விறுவிறுப்பும் இன்றி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது. ஜாலியாக விளையாட வேண்டிய போட்டியை ஈகோ மோதலுடன் போட்டியாளர்கள் விளையாடுவதால் பார்ப்பதற்கு சலிப்படைய செய்கிறது இந்த சீசன்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இப்படியும் நடக்கிறதா? ரஞ்சித் மனைவி பிரியா ராமன் கூறிய பகீர் தகவல்கள்!
Bigg Boss 8 TRP
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் 13 பேர் விஜய் டிவி பிரபலங்கள். சீரியலில் வாய்ப்பு கிடைக்காதவர்களை ஒன்று சேர்த்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் விஜய் டிவி சீரியல் பார்ப்பது போல் அழுகாட்சியாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த சீசனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதை அதன் டிஆர்பி ரேட்டிங்கும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
Bigg Boss Tamil TRP
அதன்படி விஜய் டிவி சீரியல்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகவும் கம்மியான டிஆர்பி ரேட்டிங்கே கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் ஒளிபரப்பாகியதன் மூலம் வெறும் 5.72 டிஆர்பி புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் அதைவிட விஜய் டிவி சீரியல்களான சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்கள் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளன. சிறகடிக்க ஆசை சீரியல் 8.2 டிஆர்பி புள்ளிகளையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7 டிஆர்பி புள்ளிகளையும், பாக்கியலட்சுமி சீரியல் 6.4 டிஆர்பி புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.
Siragadikka aasai
இதன்மூலம் பிக்பாஸுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிக்பாஸை பார்ப்பதற்கு நாம் சீரியலையே பார்த்துவிடலாம் என மக்கள் வெறுத்துப்போய் இருக்கிறார்கள் என்பது இந்த டிஆர்பி மூலம் தெரியவருகிறது. இனியாவது விதவிதமான டாஸ்குகள் மூலம் பிக்பாஸ் பிக் அப் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... TRP-யில் புஸ்சுனு போன விஜய் டிவி; அடிச்சுதூக்கிய சன் டிவி! இந்த வார டாப் 10 சீரியல்கள் இதோ