Vettaiyan Movie Review : த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ரஜினியின் 170வது படமான இதை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் ஏற்கனவே மனசிலாயோ, ஹண்டர் வண்டார் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவுக்கு தான் சொல்லி இருந்தாராம் இயக்குனர் ஞானவேல், ஆனால் இது ரஜினிகாந்துக்கு பொருத்தமாக இருக்கும் என சூர்யா சொன்னதை அடுத்து தான் சூப்பர்ஸ்டாரை வைத்து வேட்டையன் படத்தை எடுத்திருக்கிறார் ஞானவேல்.

வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்படும், ஆனால் அதற்கு முன்னரே ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்காட்சி திரையிடப்பட்டு உள்ளது. அங்கு படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்கள் எக்ஸ் தளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்.... வேட்டையன் பட நடிகர், நடிகைகளின் கூலி எவ்வளவு?

வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரின் மாஸ் மொமண்ட்ஸையும் கொண்டாடும்படி உள்ளது. அரை மணி நேரத்துக்கு பின்னர் கொலை குற்றத்தின் விசாரணை பற்றி விறுவிறுப்பாக நகர்கிறது திரைக்கதை. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. எமோஷனல் காட்சிகள் நன்கு கனெக்ட் ஆகி உள்ளது. துஷாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் ரோல் நகைச்சுவையாக உள்ளது. மொத்தத்தில் வேட்டையன் மாஸ் பிளஸ் கிளாஸ் நிறைந்த மெசேஜ் உள்ள படம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி Above average என பதிவிட்டு உள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…

வேட்டையன் ஒரு ராவான படமாக உள்ளது. இயக்குனர் ஞானவேலுக்கு இது மறக்கமுடியாத வெற்றி. தலைவரை சிறப்பாக காட்டியதற்கு நன்றி. இப்படம் ஒரு டிரெண்ட் செட்டராக இருக்கும். ரஜினிகாந்த் தன்னுடைய ரோலில் மிளிர்கிறார். அனிருத், அமிதாப், பகத் பாசில் என அனைவருமே சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். சந்தேகமே இல்லை, இந்த வருடத்தின் சிறந்த படம் இது. மீண்டும் ஒரு ரெக்கார்ட் பிரேக்கிங் படமாக வேட்டையன் உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறார்.

Scroll to load tweet…

வேட்டையனுக்கு பிளாக்பஸ்டர் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜெயிலர் பட சாதனையை முறியடிக்குமானு தெரியல, ஆனா அத விட ரொம்ப நல்ல படம். ஞானவேல் எங்க ஜெயிக்குறார்னா ரசிகர்களுக்கு மாஸ் மொமண்ட்ஸ படம் பூரா உறுத்தல் இல்லாம தெளிச்சு வெச்சுருக்காரு. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத படம். இரை விழுத்துருச்சு என பதிவிட்டு உள்ளார். 

Scroll to load tweet…

வேட்டையன் கண்டெண்ட் உள்ள கமர்ஷியல் படமாக உள்ளது. சில சீன்களை என்ஜாய் பண்ணிவது மட்டுமின்றி கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. இவ்ளோ பெரிய நட்சத்திர படையை திறம்பட கையாண்டுள்ள இயக்குனர் ஞானவேலுக்கு பாராட்டுக்கள். 

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்.... போட்ரா வெடிய.. 'வேட்டையன்' பட சிறப்பு காட்சிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த தமிழக அரசு!