கடந்த 8ம் தேதி டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளது. ஆம் ஆத்மியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக 8 இடங்களை கைப்பற்றிய நிலையில், காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது. 

இதையும் படிங்க: சனம் ஷெட்டியை தர்ஷன் கழட்டிவிட காரணம் இதுதான்... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

மூன்றாவது முறையாக தலைநகரில் ஆட்சி அமைக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

அதில் மறுபடியும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மக்கள் வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து, ஆம் ஆத்மி கட்சியை வெற்றியடையச் செய்துள்ளனர். டெல்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தால் நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்லலாம் என்று பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

அந்த ட்வீட்டில் கமெண்ட் செய்துள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, நேர்மை மற்றும் வளர்ச்சிக்கு பெயரே நீங்கள் தான் சார் என்று கமெண்ட் செய்து,சைலண்டாக கமலை கலாய்த்துள்ளார்.