இயக்குநர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அடையாளம் காணப்பட்டவர் காஜல் அகர்வால். ஆனால் இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இந்தி, தெலுங்கு படங்கள் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தன. தற்போது, மும்மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். கடந்த ஆண்டு, ஜெயம் ரவியுடன் நடித்த ந்த கோமாளி படம், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இதுக்கு போடாமலே இருக்கலாம்... ஓவர் கிளாமர் டிரெஸில் பிக்பாஸ் சாக்‌ஷி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

34 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு ஒருபுறம் குடும்பத்தினர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர். இந்த ஆண்டுக்குள் எப்படியாவது காஜலுக்கு டும்,டும், டும் கொட்ட தீர்மானித்துள்ளனராம். இதற்கிடையே, சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட அவரது மெழுகு சிலை கடந்த சில நாட்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட காஜல் தனது மெழுகு சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இது வைரலானது.

இதனிடையே கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். 85 வயது பாட்டியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இதையும் படிங்க: 'ஐயம் பேக்'... விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் ஜெயஸ்ரீ... வைரலாகும் அதிரடி அறிவிப்பு...!

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், மேக்கப் அறையில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். கெட்டப் என்னன்னு தெரியமலேயே கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணி மேல் உள்ள எதிர்பார்ப்பால் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால் 85 வயதாக பெண்ணாக நடிக்கின்றேன் என்று இந்தியன் - 2 படத்தை ஸ்கூப்பை உடைத்தார். இதனால் காஜல் அகர்வால் மீது செம்ம கடுப்பில் இருந்தார் ஷங்கர். இந்த சமயத்தில் பாட்டியம்மா கெட்டப்பில் லைட்டாக முகம் தெரியுற மாதிரி போட்டோ போட்டிருந்தாங்க காஜலை படத்திலிருந்தே தூக்குனாலும் தூங்கியிருப்பார் ஷங்கர்.