இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை டிவி, சோசியல் மீடியா என அனைத்திலும் அதிகம் பேசப்பட்ட விஷயம் சீரியல் தம்பதி ஜெயஸ்ரீ - ஈஸ்வர் பஞ்சாயத்து. கணவர் ஈஸ்வருக்கும் அவருடன் சீரியலில் நடிக்கும் மகாலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜெயஸ்ரீ. அதற்காக தனது மாமியார், ஈஸ்வர் உள்ளிட்டோர் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க:  காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

இதையடுத்து கைது செய்யப்பட ஈஸ்வரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மூவர் தரப்பில் இருந்து மாற்றி, மாற்றி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த 16ம் தேதி தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீ, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டுள்ளார். 

இதனை தனது ரசிகர்களுக்கு அறிவிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் ஐம் பேக் என்ற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் கணவர் ஈஸ்வரை விட்டு பிரிந்து வாழ்த்து வரும் ஜெயஸ்ரீ, அவருடைய துணை இல்லாமல் மகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தனது நடன பள்ளியை மீண்டும் தொடங்கியுள்ளார். 

இதையும் படிங்க: இதுக்கு போடாமலே இருக்கலாம்... ஓவர் கிளாமர் டிரெஸில் பிக்பாஸ் சாக்‌ஷி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

அதேபோல், ஜெயஸ்ரீயின் மகள் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற சீரியலில் நடித்து வருகிறார். பல போராட்டங்களை கடந்து, மீண்டும் தன்னம்பிக்கையுடன் நல்ல முறையில் வாழ்க்கையை தொடங்க உள்ள ஜெயஸ்ரீக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.