தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள, இவிபி பிலிம் சிட்டியில் நடந்த போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நடன இயக்குனர் பிருந்தா இயக்கி வரும் 'ஹே சினாமிகா' என்கிற படத்திலும் நடிகை காஜல் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள, பாரிஸ் பாரிஸ் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடந்து பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால், நட்சத்திர ஓட்டல் ஒன்றில், கையில் மது கோப்பையை வைத்து கொண்டு, சிரித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் கண்கள் சொக்கியபடி, காஜல் எலைட்டாக சிரிக்கிறார்.

அந்த புகைப்படம் இதோ..