அவருக்கு மட்டும் வயசு கம்மியா இருந்தால்...சமீபத்தில் தாத்தாவான சர்ச்சை இயக்குநரை டார்கெட் செய்த கவர்ச்சி நடிகை
சமீபத்தில் யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவருக்கு மட்டும் வயசு கொஞ்சம் கம்மியா இருந்தா, நானே அவரை கல்யாணம் செஞ்சியிருப்பேன் என்று பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராம் கோபால் வர்மா இந்த பெயரைக் கேட்டாலே கோலிவுட், டோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஆட்டம் காணும்.அப்படிப்பட்ட சர்ச்சை வரலாறுகளுக்கு சொந்தக்காரர். சூர்யாவின் ரத்த சரித்திரம், வீரப்பன், லக்ஷிமி என்.டி.ஆர். என அடுத்தடுத்து சர்ச்சை படங்களை இயக்கியவர். படங்கள் மட்டுமல்லா, அவரது பேச்சும், டுவிட்டர் பதிவுகளும் கூட சில நேரங்களில் சிக்கலை இழுத்துவரும்.
வாய்ப்பு கேட்டு போன படுக்கைக்கு கூப்பிறாங்க என பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மேல் பகிரங்க குற்றச்சாட்டை பகிர்ந்தவர் காயத்ரி குப்தா. சுருக்கமா சொல்லணும்னா இன்னொரு ஸ்ரீரெட்டி. 2107ம் ஆண்டு சாய்பல்லவி, வருண் தேஜ் நடிப்பில் வெளியான ஃபிடா படத்தில் அவரது தோழியாக நடித்திருந்தார். ராம் கோபால் வர்மாவின் ஐஸ் க்ரீம் 2 படத்திலும் காயத்ரி நடித்துள்ளார்.
அகஸ்தியா மஞ்சு மற்றும் ராம்கோபால் வர்மா இணைத்து இயக்கிய பியூட்டி ஃபுல் என்ற படம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்திலும் காயத்ரி குப்தா நடித்துள்ளார். சமீபத்தில் யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவருக்கு மட்டும் வயசு கொஞ்சம் கம்மியா இருந்தா, நானே அவரை கல்யாணம் செஞ்சியிருப்பேன் என்று பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மாவின் மகள் ரேவதிக்கு இந்த மாதம் தான் பெண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் தாத்தாவாக புரோமோட் ஆன ராம் கோபால் வர்மாவை தான் கட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார் இந்த கவர்ச்சி புயல்.