Asianet News Tamil

அசிங்கமாக நடந்த உறவினர்! மகள் கண்ட அதிர்ச்சி... தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

நடிகையாக, சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கி, இன்று இயக்குனர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு விதங்களில் தன்னுடைய திறமையை திரையுலகில் வெளிப்படுத்தி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
 

actress cum director share the bad experience her life
Author
Chennai, First Published May 17, 2020, 7:08 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகையாக, சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கி, இன்று இயக்குனர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு விதங்களில் தன்னுடைய திறமையை திரையுலகில் வெளிப்படுத்தி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மேலும் செய்திகள்: லாக் டவுன்... வேலையிலாததால் அதிகரித்த கடன்! திருமணமான 2 வருடத்தில் தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகர்!
 

இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும், ஏதேனும் ஒரு கருத்தை ஆழமாக வலியுறுத்தும் படங்களாகவே அமைந்தது.  கடந்த 2016 ஆண்டு வெளியான 'அம்மணி' திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'ஹவுஸ் ஓனர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இவர் இயக்கும் படங்களை விட, இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிக்கு... தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. காரணம் அடுத்தவரை வீட்டு கதையை கேட்பதில் சிலருக்கு உள்ள ஆர்வம் தான். நான்கு சுவருக்குள் இருக்க வேண்டிய குடும்ப பிரச்சனைகளை, வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இவர் நடத்தி வரும் நிகழ்ச்சி. இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிரபல தொலைக்காட்சியில் நடந்த இந்த நிகழ்ச்சியிக்கு கோர்ட் தடை விதித்தது.

மேலும் செய்திகள்: 'காக்க காக்க' படத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்! சூர்யாவுடன் ஜோரா நிற்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
 

இதை தொடர்ந்து மீண்டும் மற்றொரு தொலைக்காட்சியில் தன்னுடைய பிரவேசத்தை துவங்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்நிலையில் இவரின், அறியாத வயதில்... அப்பா வயதுகொண்ட ஒரு மனிதர் அசிங்கமாக நடந்து கொண்டது குறித்து முதல் முறையாக கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், "என் சிறிய வயதில் அப்பா ஸ்தானத்தில் இருந்த உறவினர் ஒருவர் அடிக்கடி என் முன்பு தனது அந்தரங்க உறுப்பை காட்டியபடி நின்றுள்ளார். ஆரம்பத்தில் அதன் அர்த்தம் என்ன வென்று தெரியாது. போகப்போக வயது வந்த பிறகு அவர் செய்த கொடுமையான செயல் மனதில் ரணமாக மாறியது. இத்தனை நாட்கள் இதை என் மனதின் இருட்டு அறையில் யாரும் அறியாமல் மறைத்து வைத்தேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..! இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !
 

இதே போல் சமீபத்தில் தன்னுடைய மகளுக்கும் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது. பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது லிப்டில் ஒருவன் தன் பேண்ட்டை அவிழ்த்து காட்டியுள்ளான். பதறிப்போன என் மகள் அலறியபடி ஓடி வந்து இதுகுறித்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: பாத் ட்ரெஸ்ஸில்... அந்த இடத்தில் குத்திய டாட்டூவை தயக்கம் இல்லாமல் காட்டிய சாக்ஷி!
 

பின் சிசிடிவியில் காட்சியை தேடி பார்த்தும் அந்த மனிதனின் முகம் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இவையெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை யோசிப்பது தான் தீர்வு" என முதல் முறையாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்களை பகிர்ந்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Follow Us:
Download App:
  • android
  • ios