கொரோனா அச்சம் காரணமாக, தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை சீரியல் பணிகள் மட்டுமே அதுவும் பல்வேறு நிபந்தனைகளோடு நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்: தொப்புளுக்கு கம்மல் போட்டு யாஷிகா பண்ணும் அலப்பறை..! ஹாட் போட்டோ...!
 

இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால், அவ்வப்போது சில பிரபலங்கள்... தங்களுடைய ரசிகர்களுடன் சமூக வலைதள பக்கத்தில் பேசி வருகிறார்கள். ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதிலளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில்  நடிகை அபர்ணா நாயர் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் பேசிய போது, மிகவும் ஆபாசமான வார்த்தையால் நடிகையிடம் அத்து மீறி பேசினார். இதற்கு ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்த அபர்ணா நாயர், தற்போது அந்த நபரை நேரில் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வனிதாவின் 3 ஆவது திருமணம்...! கணவராக போகும் பீட்டர் பால் இவரா? புகைப்படம் இதோ
 

தமிழில் ’எதுவும் நடக்கும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா நாயர். மேலும் பல மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனது முகநூலில் ரசிகர்களிடம் உரையாடியபோது, நெட்டிசன் ஒருவர், மிகவும் மோசமான வார்த்தையால் அவரை விமர்சித்தார். இதற்கு அபர்ணா நாயர், ‘என் மீது அக்கறை கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல என பதிலடி கொடுத்தார். மேலும் இதுபோல் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை’ என்று கூறிய கையேடு, அத்து மீறி பேசிய நெட்டிசன் மீது சைபர் க்ரைம் போலீசிலும் புகார் கொடுத்தார்.

மேலும் செய்திகள்: வனிதாவுக்கு 3 ஆவது கல்யாணம் கன்ஃபாம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?
 

சைபர் க்ரைம் போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து நடிகை அபர்ணா நாயருக்கு தகவல் கொடுத்தனர். அந்த நபர் தன்னுனடய இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர் என்பதால், உடனடியாக அந்த நபரை சந்தித்த அபர்ணா, இனி எந்த பெண்ணிடமும் இது போல் ஆபாசமாக பேச மாட்டேன் என எழுதி தருவது தான் உனக்கு சிறந்த தண்டனை என எழுதி வாங்கியுள்ளார். மேலும் அந்த நபரின் குடும்பத்தை கருத்தில் கொண்டு, அவர் மீது கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் நடிகை அபர்ணா நாயரின் துணிச்சலையும் பாராட்டி வருகிறார்கள்.