நடிகை அனுஷ்கா 'பாகமதி' படத்திற்கு பின், மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம், 'நிசப்தம்'. அடுத்த மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , கொரோனா தாக்கத்தால் இப்படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், 'நிசப்தம்' படக்குழுவினருடன்... ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், அனுஷ்கா தொகுப்பாளர் கேட்ட பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக அனுஷ்காவிற்கு 'அருந்ததி' பட வாய்ப்பை கொடுத்து, இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய மறைந்த இயக்குனர், கோடி ராமகிருஷ்ணாவை பற்றி பேசும் போது, அனுஷ்கா அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழுதார்.

பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகே அனுஷ்கா மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினார். திரையுலக வாழ்க்கையில் திருப்புனையை ஏற்படுத்திய இயக்குனர் மீது அனுஷ்கா வைத்திருந்த மரியாதை அவருடைய கண்ணீரில் இருந்தே தெரிகிறது....

இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ...