தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்",  "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

இதையும் படிங்க:  "தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்"... திரெளபதி விஷயத்தில் பலித்துவிட்டதா பா.ரஞ்சித் வாக்கு??

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 

சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது. அதனால் உடல் எடையைக் குறைக்க தீர்மானித்த அஞ்சலி, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

ஸ்லிம் லுக்கிற்கு மாறி என்ன செய்ய, பட வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை. அதனால் தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா என லேடி சூப்பர் ஸ்டார்களிடம் கால்ஷீட் கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்த தயாரிப்பாளர் தரப்பிற்கு யாருமே பிடி கொடுக்கவில்லையாம்.

இதையும் படிங்க: அமைச்சருக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சி கிளப்பிய பிரபல நடிகை... அதிரவைக்கும் ஹாட் போட்டோஸ்...!

இதனால் தான் காற்று அஞ்சலி பக்கம் வீசியுள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த அஞ்சலி அந்த புது லுக்கில் இப்படி மூத்த நடிகர் கூட நடிக்கிறாங்களே என ஆதங்கப்படாதீங்க. சும்மா ஒண்ணும் இல்ல, இந்த படத்தில் நடிக்க அம்மணிக்கு சம்பளம் ஒருகோடியாம். இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்தவர் ஒரு கோடி என்றதும்... உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம்.