Actress Shruti Haasan : உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய மூத்த மகளும், பிரபல நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 

சென்னையில் கடந்த 1986ம் ஆண்டு பிறந்த நடிகை தான் சுருதிஹாசன், அவருக்கு வயது 38. சென்னையில் தனது பள்ளி படிப்பை முடித்த அவர், மும்பையில் உளவியலில் படத்தில் பட்டம் பெற்றார். சிறு வயது முதலையே தனது தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய சுருதிஹாசன் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ஏழாம் அறிவு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தனது பயணத்தை தொடங்கினார். 

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பல படங்களில் தொடர்ச்சியாக அவர் நடித்து வருகிறார். இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான சலார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகின்றார். 

Madhuri : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது.. அலங்கார ஆடையில் அசத்தும் ஆதி பட நடிகை மாதுரி ஜெயின் - Cute Photos!

அண்மையில் அவர் இசையமைத்து பாடிய "இனிமேல்" என்கின்ற இசை ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இந்த ஆல்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து வழங்கினார். மேலும் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த சூழ்நிலையில் சாந்தனு என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அண்மையில் அவர்கள் இருவரும் பிரிந்து, தற்போது தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார் ஸ்ருதி ஹாசன். அவருக்கு காதல் கசந்த நிலையில் மீண்டும் பாடல்களை எழுத துவங்கியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

View post on Instagram

என் கதவுகளை மூடிவிட்டேன் என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசிய அவர், மீண்டும் பாடல்களை எழுத துவங்கிவிட்டதாகவும். நீச்சல் குலத்தின் அடியில் வெளிச்சத்தை தேடிய தனக்கு கிடைத்தது வெறும் பாசிகள் தான் என்று கூறியுள்ளார். மேலும் புதிதாக ஆல்பம் ஒன்றை விரைவில் அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Atlee: இந்திய சினிமாவில் யாரும் பெறாத மிகப்பெரிய சம்பளம்.? அட்லீயை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்!