Atlee: இந்திய சினிமாவில் யாரும் பெறாத மிகப்பெரிய சம்பளம்.? அட்லீயை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்!
அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை, நடிகை அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து இயக்க உள்ள நிலையில், இந்த படத்தை தயாரிக்க உள்ள நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Atlee and Priya Atlee Photos
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ... தன்னுடைய முதல் படத்திலேயே நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா போன்ற முன்னணி பிரபலங்களை வைத்து படம் இயக்கிய நிலையில், அந்த படத்தை வெற்றி படமாக மாற்றினார்.
Atlee
இதை தொடர்ந்து, தளபதி விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக மாறி, தெறி, மெர்சல், என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ. இதை தொடர்ந்து அதிரடியாக பாலிவுட் திரையுலகின் பக்கம் சென்றார்.
நடிகர் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சுமார் 1200 கோடி வசூலால் திரையரங்குகளை தெறிக்க விட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் 6 மதத்திற்கு மேல் மனைவி மற்றும் குழந்தைக்கு மட்டுமே நேரம் ஒதுக்கிய அட்லீ... தற்போது தன்னுடைய அடுத்த பட கதையை தயார் செய்துவிட்டு, படத்தை இயக்க தயாராக இருக்கிறார்.
Ajith
அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை, புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து இயக்க உள்ளார். விரைவில் அல்லு அர்ஜுன் இப்படத்தில் இணைய உள்ள நிலையில்... இந்த படத்தை தயாரிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவியதாகவும், அட்லீக்கு இந்திய திரையுலகில் இதுவரை யாரும் பெறாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து, அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தை தயாரித்து வரும் நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அட்லீ ஜவான் படத்திற்க்கு பெற்ற சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகம் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.