திருமணத்திற்கு முன்பே, ஜார்ஜ் என்பவரை காதலித்து, அவருடைய  குழந்தைக்கும்  தாயாகியுள்ள எமி ஜாக்சன் தன்னுடைய செல்ல மகன் பிறந்தநாளை கடந்த சில தினங்களுக்கு முன், பிரமாண்டமாக கொண்டாடினார்.  இந்நிலையில் முதல் முறையாக மகனின் பிறந்தநாள் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சன் டிவி சீரியல் நடிகை..! தனிமை படுத்தப்பட்டதாக வெளியான தகவல்!
 

நடிகை எமி ஜாக்சன், இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ’மதராச பட்டணம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய்யின் ’தெறி’ தனுஷின் 'விஐபி' உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கோலிவுட், டோலிவுட்டை தாண்டி, அம்மணி ஹோலிவுட்டிலும் 'சூப்பர் கேர்ள்' என்கிற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானார்.

பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே திடீர் என தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த எமி, பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், குழந்தை பிறந்த பின்னர், 2020 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் தற்போது வரை இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: வித்தியாசமாக சேலை கட்டி அந்த இடத்தை காட்டிய வி.ஜே.மகேஸ்வரி..! கவர்ச்சி தெறிக்கும் கிளுகிளுப்பான கமெண்ட்ஸ்..!
 

இந்நிலையில் தனது குழந்தை ஆண்ட்ரியாஸ் முதல் பிறந்த நாளை தனது வீட்டில் பிரமாண்டமாக கொண்டாடி உள்ளார் எமி ஜாக்சன். மற்றும் அவரது கணவர் கலந்து கொண்ட இந்த பிறந்த நாள் விசேஷம் குறித்த வீடியோவை எமிஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டோர் ஜீவாவிற்கு திடீர் என விஜய் வீட்டில் இருந்து வந்த போன்..! காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
 

மேலும் இவர் பதிவிட்டுள்ள பதிவில்,  நான் தாய்மை அடைந்த தினத்தை நினைத்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று கருதுகிறேன். என் குழந்தை ஆண்ட்ரியாஸ் பிறப்பதற்கு முன் என் வாழ்க்கையை நான் நினைவு கூற விரும்பவில்லை. அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தது. ஆனால் என் தேவதை குழந்தையை ஒவ்வொரு நாள் காலையிலும் நான் பார்க்கும்போது உற்சாகம் ஏற்படுகிறது. என குழந்தைக்கு நான் ஒரு ரோல் மாடலாக, காவலர், நண்பர் மற்றும் தாயாக இருக்க விரும்புகிறேன்’ என்று எமிஜாக்சன் பதிவிட்டுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My beautiful baby boy’s special day ✨

A post shared by Amy Jackson (@iamamyjackson) on Sep 23, 2020 at 5:36am PDT