பாண்டியன் ஸ்டோர் ஜீவாவிற்கு திடீர் என விஜய் வீட்டில் இருந்து வந்த போன்..! காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
இந்நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னை போனில் அழைத்தார் என்றும் அதற்க்கு காரணம் விஜய்யின் தாயார் ஷோபா மேம் தான் என மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் அணைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
அதில் ஒன்று தான் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், கூட்டு குடும்பத்தை பற்றியும் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் நடித்து வரும், சுஜிதா, சித்ரா, ஹேமாவை போல், இந்த தொடரின் நடித்து வரும் ஹீரோக்களுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.
இந்த தொடரில் மூன்று தம்பிகளில் ஒருவராக நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். ஜீவா என்கிற பெயரில் இந்த தொடரில் நடித்து வருகிறார்.
ஜீவா - மீனா கேரக்டருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மட்டும் இன்றி, பல தொடர்களில் ஜீவா நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னை போனில் அழைத்தார் என்றும் அதற்க்கு காரணம் விஜய்யின் தாயார் ஷோபா மேம் தான் என மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அப்போதுதான் ஷோபா மேம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மிகப்பெரிய ரசிகர் என்பது எனக்குத் தெரிந்தது என கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சார் புதிய படத்துக்கு நடிகரைத் தேடிக் கொண்டிருக்கையில் ஷோபா மேம் தன்னை பரிந்துரை செய்தார் என அவர் தெரிவித்ததாகவும் அதற்க்கு அவருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது கொரோனா ஊரடங்குக்கு முன்னால் நடந்திருக்க வேண்டியது. ஆனால் இந்த கொரோனா வந்து மாற்றி விட்டது. கொரோனா எல்லோருடைய வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது என்னையும் சேர்த்து. எது எப்படியோ ஆனால் நான் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என தெரிவித்துள்ளார் வெங்கட்.